🌺 பொது அறிவு தகவல்கள்
🌺 உலோகங்களிலேயே மிக அதிக உருகுநிலையை பெற்றுள்ள உலோகம் டங்க்ஸ்டன் ஆகும். இதன் உருகுநிலை 3300 C ஐ விட அதிகம்.
🌺 மிகவும் எடை குறைந்த உலோகம் லித்தியம். நீரின் நிறையில் சரிபாதி நிறையை இவ்வுலோகம் பெற்றுள்ளது.
🌺 மிகவும் அதிக எடை உள்ள உலோகம் ஆஸ்மியம். இவ்வுலோகம் , நீரின் நிறையைப் போல் 22 1/2 மடங்கு அதிக நிறை கொண்டது. மேலும், இரும்பை போல் 3 மடங்கு அதிக நிறை உடையது .
🌺 சில தாவரங்களால் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்க முடிகிறது. ஆனால் , நைட்ரஜன் குறைபாட்டால் புரதத்தை உற்பத்தி செய்ய முடிவதில்லை. இவை சிறு பூச்சிகளைப் பிடித்து , அவற்றைச் செரிக்கச் செய்து நைட்ரஜனைப் பெறுவதன் மூலம் இக்குறைபாட்டை நிவர்த்தி செய்கின்றன. இத்தகைய தாவரங்கள் பூச்சி உண்ணும் தாவரங்கள் எனப்படும். எ. கா. நெப்பந்தஸ், ட்ரஸீரா.
🌺 நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்பவர்கள் , அங்குள்ள கார்பன் துகள்களைச் சுவாதிப்பதனால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது.