🌺 ஜேம்ஸ் பிரஸ்காட் ஜூல்

🌺 ஜேம்ஸ் பிரஸ்காட் ஜூல்

ஜேம்ஸ் பிரஸ்காட் ஜூல் என்ற அறிஞர் 772 அடி உயரத்தில் இருந்து 1 பவுண்ட் எடை கீழே விழும்போது வெளிப்படும் வெப்பத்தின் அளவானது அதே 1 பவுண்ட் எடையுள்ள நீரின் வெப்பநிலையை மிகச் சரியாக 1 பாரன்ஹீட் அதிகமாக்கும் என்பதைப் பரிசோதனை மூலம் நிறுவினார். இதன் மூலம் செய்யப்படும் வேலைக்கும் வெப்பத்திற்கும் இடையேயான தொடர்பையும் நிறுவினார்.அவர் நினைவாக வேலையின் அலகினை Sl அளவீட்டு முறையில் ஜூல் என அழைக்கிறோம். மேலும் அவர் மின்னோட்டவியலில் மின்னோட்டம் பாயும் கடத்தியில் இருந்து வெப்பத்திற்கான விதியையும் நிறுவினார்.மின்னாற்றலால் செய்யப்படும் வேலையின் அளவு, வெப்ப அளவு, எந்திர ஆற்றலால் செய்யப்படும் வேலையின் அளவு ஆகியவற்றிற்கான தொடர்பையும் நிறுவினார்.

Leave a Reply



Design a site like this with WordPress.com
Get started