🌺 ஆல்பிரட் நோபல் ( 1833 – 1896)
🌺 ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சக்திமிக்க வெடிமருந்து ( டைனமைட்) கண்டுபிடிப்பாளர் ஆல்பிரட் நோபல் 1895 ஆம் ஆண்டு நோபல் பரிசை நிறுவினார்.மனித இனத்திற்குச் சிறந்த முறையில் தொண்டாற்றும் இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் உடற்செயலியல் அல்லது மருத்துவம் ஆகிய துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களுக்கு 1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. 1969 ஆம் ஆண்டு முதல் பொருளாதார அறிவியலுக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.
🌺 இலக்கியம்
🌺 பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளரும் பெண் எழுத்தாளருமான ஸ்வெட்லானா அலெக்ஸி விச் (67) அவர்கள் மானுடத்தின் குரல்களைப் பதிவு செய்யும் விதமாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு மனித உணர்வுகளின் வரலாறு மற்றும் ஆத்மாவின் வரலாற்றை உருவாக்கியதற்காக 2015 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.