தகவல் துளிகள்



🌺 பழமையான கலங்கரை விளக்கம் எகிப்தின் அலெக்சாந்திரியாவில் அமைக்கப்பட்டதாகும். 🌺 எறும்பினால் தன் எடையை விட 30 மடங்கு எடையை இழுத்துச் செல்ல முடியும். 🌺 எடிசன் சிறுவனாக இருந்த போது இரயில் நிலையத்தில் செய்தித்தாள்கள் விற்கும் தொழில் செய்துள்ளார். 🌺 புல்லாங்குழல் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்படுகிறது. 🌺 காரில் அமர்ந்தபடியே சினிமா பார்க்கும் வசதி முதன் முதலில் நியூஜெர்சி நகரில் 1933 - ல் ஆரம்பிக்கப்பட்டது. 🌺 பெரும்பாலான மனிதர்களின் விருப்ப நிறம் நீலமாக உள்ளது. 🌺 ஆமைக்கு பற்கள் கிடையாது. உறுதியான ஈறுகளால் அவை உணவை மெல்லுகின்றன. 🌺 உலகின் மக்கள் நெருக்கடி அதிகமுள்ள நகரம் ஜப்பானின் டோக்கியோ. 🌺 நோபல் பரிசு 1901 முதல் வழங்கப்படுகிறது. 🌺 கங்கை நதி வங்காள தேசத்தில் வங்காள விரிகுடா கடலில் சங்கமம் ஆகிறது. 🌺 ஆமணக்கு எத்தியோப்பியாவை தாயகமாகக் கொண்டது.

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started