🌺 பருவநிலை மாற்றத்தால் உருவாகும் பனி பிரதேசங்களில் ஏற்படும் துளைகள்

🌺பருவநிலை மாற்றத்தால் உருவாகும் பனி பிரதேசங்களில் ஏற்படும் துளைகள்

🌺 புவி வெப்பமயமாதல் இன்று ஒரு மிகப்பெரிய பிரச்சினை. இதனால் தொடர்ந்து பருவநிலை மாறுபாடுகளால் மொத்த பூமியும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தற்போது ஆர்ட்டிக் பிரதேசங்களில் உருவாகியிருக்கும் மிகப் பெரிய சிக்கல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆர்ட்டிக்கின் வடக்குப் பகுதியில் மிகப் பெரிய துளைகள் பனிப்பாறைகளுக்கு இடையே உருவாகியிருக்கிறார். சார்லி பால் என்ற விஞ்ஞானி தலைமையிலான ஒரு குழு இதனைக் கண்டறிந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு குட்டி நகரத்தையே விழுங்கிக் கூடிய அளவுக்கான பெரிய துளைகள் முதல் சிறு தெருவொன்றில் இருக்கும் நான்கு மாடிக் கட்டடங்களை மொத்தமாக விழுங்கக்கூடிய அளவுக்கான சிறிய துளைகள் வரை இவை பலவகையானதாக இருக்கிறதாம். இந்த துளைகள் அனைத்தும் கடந்த பத்தாண்டுகளில் உருவானவை என்பது தான் கவலை தரும் விஷயம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். புவி வெப்பமயமாதல் தொடருமானால் இந்த துளைகள் மேலும் அதிகரிக்கும். இதனால் கடல் மட்டம் உயர்ந்து , பூகம்பம் உருவாவது எனப் பல இயற்கைப் பேரழிவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Leave a Reply



Design a site like this with WordPress.com
Get started