🌺 வாழ்க்கை பொன்மொழிகள்
🌺 அன்பு சில குறைகளைப் பொருட்படுத்தாது. ஆனால் உண்மை எந்தக் குறையையும் பொறுக்காது. – ரஸ்கின்
🌺 தன்னைக் கீழே தள்ளிய குதிரை மீதுதான் சவாரி செய்ய விரும்புவான் உண்மையான வீரன் . – ஸ்காட்
🌺 பொழுதை வீணாக்காதே . ஏனென்றால் வாழ்க்கையின் மூலப்பொருள் நேரம்தான். – பிராங்க்ளின்
🌺 ஆடம்பரத்தின் மென்மையான மெத்தை மீது பெரும்பாலான ராஜ்ஜியங்கள் அழிந்தன . – யங்
🌺 நம்பிக்கைதான் பெரும் பணம் , வசதிகளை அடையக்கூடிய வித்தையின் இரகசியமாகும்.
– அவடோய்
🌺 உண்மையைக் காண்பது கடினமல்ல . அதைக் கண்டதும் ஓடாமல் இருப்பதுதான் கடினம் . – ஏட்ரியன் சில்சன்
🌺 இன்பம் , துன்பம் எனும் அலைகளால் வாழ்க்கை அலைக்கழிக்கப்படுகிறது . எல். இ. லாண்டன்