🌺 டிராகுலா வௌவால்கள்

🌺 டிராகுலா வௌவால்கள்

பொதுவாக வௌவால்கள் சைவம் தான்.பழங்கள் மற்றும் கொட்டைகளையே சாப்பிடும். பூச்சிகளை உண்ணும் வௌவால் இனங்களும் உண்டு. ஆனால் , அமெரிக்க கண்டத்தின் மத்தியப் பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் வசிக்கும் சில வகை வௌவால்கள் மட்டும் இரத்தத்தைக் குடிக்கும் கொடூர மிருகங்களாக இருக்கின்றன.இவற்றை பறக்கும் டிராகுலாக்கள் என்று அழைக்கிறார்கள் மக்கள். டிராகுலா போல் இரத்தத்தை குடிப்பதன் காரணம் என்ன என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள்.பிற வௌவால் இனங்களில் உள்ள ஜீன் கட்டுமானங்களில் பதிமூன்று ஜீன்கள் இந்த வகை வௌவால்களில் இல்லாததே காரணம். இந்த ஜீன் அமைப்பே இரும்புச் சத்தும், புரதச்சத்தும் நிறைந்த குறைவான கொழுப்புச்சத்து கொண்ட கார்போஹைட்ரேட்டே இல்லாத ஒரு ருசியான டயட்டான இரத்தத்தை சுவைக்கும் பழக்கத்தை இந்தப் பாலூட்டிகளுக்குக் கொடுத்திருக்கிறதாம்.
அமெரிக்காவில் உள்ள ஆயிரத்து நானூறு வகையான வௌவால் வகைகளில் மூன்று இனங்கள் தான் இப்படி இரத்தவெறி பிடித்து அலைகின்றன. இந்த அமைப்பு சில வகை எலிகளிடமும் உண்டு என்கிற அதிர்ச்சியான செய்தியையும் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Leave a Reply



Design a site like this with WordPress.com
Get started