🌺 அதிவேகத்தில் அழியும் பறவை இனங்கள்

🌺 அதிவேகத்தில் அழியும் பறவை இனங்கள்

🌺 உலகளவில் பறவைகள் அதிவேகத்தில் அழிவுக்குள்ளாகி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

🌺 குறிப்பாக, ஆசியா மற்றும் அமெரிக்காவில் பறவையினங்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இரண்டு முக்கிய ஆய்வுகள் கூறுகின்றன.

🌺 அமெரிக்கா, கனடாவில் 1970 காலகட்டத்தை ஒப்பிடும்போது தற்போது வடஅமெரிக்க வகை பறவைகளின் எண்ணிக்கையில் 300 கோடி அளவுக்கு, அதாவது ஏறக்குறைய 29 சதவீதம் வரை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக முதலாவது ஆய்வு தெரிவிக்கிறது.ஜாவா மற்றும் இந்தோனேஷியாவில், ஆசிய பாடும் பறவைகள் எண்ணிக்கை சரிவை இரண்டாவது அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் ஒரு முக்கிய எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். உயிரியல் பாதுகாப்பு மற்றும் ஜர்னல்ஸ் சயின்ஸ் ஆகிய அறிவியல் சார்ந்த பத்திரிகைகளில் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

🌺 விளைநிலங்கள், சமவெளிகள், பாலைவனங்கள் என வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்துவந்த பறவைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை இந்த ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அனைத்துப் பகுதிகளும் பறவைகளின் இயல்பான சூழலைக் குலைக்கும்வண்ணம் மனிதர்களால் வாழ இயலாத இடங்களாக மாற்றப்பட்டு வருவதாகவும், அதனால் இந்த இடங்களை அன்னியப் பகுதிகளாக, வேற்றுக்கிரகங்களாக இந்தப் பறவைகள் கருதும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started