🌺 ஜான் நேப்பியர் ( 1550 – 1617)
🌺 ஜான் நேப்பியர் 1550 இல் மெர்சிஸ்டான் டவர் எனும் இடத்தில் பிறந்தார்.இது இப்போது அவர் பெயரிலேயே அமைந்துள்ள நேப்பியர் பல்கலைக்கழகத்தின் மெர்சிஸ்டான் வளாகத்தின் மையப்பகுதியில் உள்ளது. மடக்கையைக் கண்டுபிடித்த ஜான் நேப்பியர் கணிதத்தைப் பொழுதுபோக்கிற்காக ஆராய்ந்தார். ஆர்க்கிமிடிசிலிருந்து இப்போதைய கணித வல்லுநர்கள் நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டின் வரிசையில் ஜான் நேப்பியரும் இடம் பெறுகிறார்.