அறிவுக் கதைகள்

🌺 மகாத்மாவின் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் 🌺
மகாத்மா காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். அவரைப் பேட்டி எடுப்பதற்காக குஜராத்தி பத்திரிகை நிருபர் ஒருவர் வந்தார். அவர், காந்தியடிகள் கப்பலை விட்டு இறங்கியதுமே அடுக்கடுக்காக கேள்விக்கணைகளைத் தொடுத்தார்.
அவரைச் சற்று நேரம் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த காந்தி, “நீங்களும் ஓர் இந்தியர், நானும் ஓர் இந்தியர். உங்கள் தாய்மொழி குஜராத்தி. என் தாய் மொழியும் அதுதான். அப்படியிருக்க, நீங்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்கத் துணிந்து ஏன்? தென் ஆப்ரிக்கா சென்று அங்கு சில காலம் தங்கியிருந்ததால் தாய் மொழியை மறந்திருப்பேன் என்ற எண்ணமா?
அல்லது, பாரிஸ்டர் பட்டம் பெற்றவராயிற்றே , இவருடன் ஆங்கிலத்தில் பேசினால் தான் மதிப்பு என்ற எண்ணமா?” எனக் கேட்டார்.
பேட்டி எடுக்க வந்த நிருபர் தன் தவறை உணர்ந்தார்.

Leave a Reply



Design a site like this with WordPress.com
Get started