🌺 வரலாற்றில் இன்று

🌺 வரலாற்றில் இன்று

🌺 ஜன. 11:

இன்று குழந்தை தொழிலாளர் மீட்பு போராளி கைலாஷ் சத்யார்த்தி பிறந்தநாள்!

🌺குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் கைலாஷ் சத்யார்த்தி.

🌺1954 ஜனவரி 11-ம் தேதி மத்திய பிரதேசத்தில் பிறந்தார். குழந்தைகளுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர்.

🌺குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை கடத்தலுக்கு எதிராக போராடியதற்காக 2014-ல் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

🌺பச்சன் பச்சாவோ ஆந்தோலன் என்ற குழந்தை பாதுகாப்பு அமைப்பை தொடங்கினார்.

🌺குழந்தைகளை தொழிலாளர்களாகவும் கொத்தடிமைகளாகவும் ஆட்டிப்படைப்பவர்களை அம்பலப்படுத்தினார்.

🌺17 கோடி குழந்தை தொழிலாளிகள் பள்ளிக்கு செல்லவில்லை எனில் கல்வி இலக்கை நாம் ஒரு நாளும் அடைய முடியாது,

🌺பிஞ்சு கை நம்முடைய சுகாதார இலக்குகளையும் நம் நாடு இழந்துவிடும் என்றார்.

🌺கடந்த 30 ஆண்டுகளில் 86,000 குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளார்.

🌺அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மெனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இவருக்கு கௌரவம் அளிக்கப்பட்டது.

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started