🌺 வரலாற்றில் இன்று
ஜன.10:
இன்று லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கேப்ரியல்லா மிஸ்ட்ரல் நினைவு நாள்!
🌺கவிஞர், கல்வியாளர், பெண்ணியவாதி கேப்ரியல்லா மிஸ்ட்ரல்.
🌺இவர் 1945-ல் தமது கவிதை வரிகளுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்.
🌺1889 ஏப்ரல் 7-ம் தேதி விக்குனா சிலியில் பிறந்தார் கேப்ரியல்லா மிஸ்ட்ரல்.
🌺தன்னுடைய 15 வயதில் உள்ளுர் நாளிதழில் இவர் கவிதைகள் பிரசுரமான அதேவேளையில் ஆசிரியராக பணிபுரிய தொடங்கினார்.
🌺1909-ல் டி ல முர்டே (de la Muerte) என்ற கவிதைக்காக தேசிய விருது பெற்றார்.
🌺பிறகு கல்லூரி பேராசிரியராக பெர்னார்ட் கல்லூரி கொலம்பியா பல்கலையில் பணிபுரிந்தார்.
🌺இவரது பாடல்களின் மையக்கருத்தாக லத்தீன் அமெரிக்க அடையாளம் இருந்தது.
🌺1923-ல்தேசத்தின் ஆசிரியர் என்ற பட்டம் பெற்றார்.
🌺இவரின் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் ஸ்பானிஷ் மொழி செய்தித்தாள்களிலும், இதழ்களிலும் வெளிவந்தது.
🌺1951-ல் சிலியின் தேசிய விருது பெற்றார்.
🌺சிலி நாட்டின் 5,000 பெசொ எனும் ரூபாய் நோட்டில் இவரது உருவப்படம் அச்சிடப்பட்டுள்ளது.
🌺இவர் 1957 ஜனவரி 10-ல் காலமானார்.