🌺 வரலாற்றில் இன்று

🌺 வரலாற்றில் இன்று

ஜன. 04:

பிரெய்லி பிறந்தநாள்!

🌺தடித்த புள்ளிகளை விரலால் தொடுவதன் மூலம் பாடங்களை கற்க பிரெய்லி எழுத்துக்கள் உதவுகிறது.

🌺இதை கண்டுபிடித்தவர் லூயிஸ் பிரெய்லி.

🌺இவர் 1809 ஜனவரி 4-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் பிறந்தார்.

🌺குழந்தை பருவத்தில் தையல் ஊசியை வைத்து விளையாடும் போது எதிர்பாராத விதமாக பிரெய்லி கண்ணில் காயம் ஏற்பட்டது.

🌺இதற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கத் தவறியதால் பரிவுக்கண் நோயால் (sympathetic ophthalmia) தனது இரு கண்களிலும் பார்வை இழந்தார்.

🌺பார்வையற்றோருக்கான பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டபோதும் மாற்றுத்திறனாளிகள் எழுதப் படிக்க சிறப்பான முறைகள் இல்லை என்பதை நினைத்து வருந்தினார்.

🌺ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ரகசியக் குறியீடான கிரிப்டோகிராஃபி குறித்து அறிந்த பிரெய்லி அதுபோலவே உலகின் முதல் பார்வையற்றோர் எழுத்துக்களை உருவாக்கினார்.

🌺15 வயதை எட்டியபோதே பார்வையற்றோருக்கான பொது மொழியை கண்டுபிடித்தார்.

🌺பிறகு 20 வயதில் அவர் வெளியிட்ட பிரெய்லி புத்தகம் பார்வையற்றோருக்கான கல்வி முறையானது.

🌺இவரது நினைவாக இந்திய அரசு இவரது படம் பொறித்த 2 ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.

Leave a Reply



Design a site like this with WordPress.com
Get started