🌺 வரலாற்றில் இன்று
ஜன. 05:
இன்று தேசிய பறவைகள் தினம்!
🌺பறவையியல் ஆய்வாளர்களில் முன்னோடி, இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படும் சலீம் அலி.
🌺தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் இவர் ஈடுபட்டார்.
🌺இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான அரிய வகை பறவை இனங்கள் உள்ளன.
🌺தமிழகத்தில் கூழைக்கிடா, வண்ண நாரை, கரண்டிவாயன், புள்ளிமூக்கு வாத்து, செந்நீல நாரை, பாம்புதாரா, நீர்காகம் உள்ளிட்ட பலவகைப்பட்ட பறவை இனங்கள் வாழ்கின்றன.
🌺தமிழகத்தில் உள்ள சதுப்புநில காடுகள், மலைகள் போன்ற இயற்கை நிறைந்த இடங்களில் பல வகையான பறவைகள் கூடு கட்டி வாழ்கின்றன.
🌺பறவைகள் தங்களின் இனப்பெருக்கத்திற்காக வலசை போகும்.
🌺இப்படி வலசை போகின்ற பறவை இனங்கள் குறைந்து வருகிறது.
🌺அரிய வகை பறவை இனங்கள் இயற்கை சீற்றம், காடுகளை அழித்தல், இறைச்சிக்காக பறவைகளை வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் அழிக்கப்பட்டு வருகின்றன.
🌺பறவைகள் இனம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 5 ஆம் தேதி பறவைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.