🌺 பறக்கும் பாலூட்டி
🌺’கலாங் ‘ என்று அழைக்கப்படும் பழ வௌவால்கள் இந்தோனேஷியாவில் காணப்படுகிறது. இந்த வகை வௌவால் பறக்கும் பாலூட்டி வகைகளிலேயே நீளமானவை . இந்த வகை வௌவாலின் உடல் அதாவது தலைமுதல் கால் வரை 40 சென்டி மீட்டர் நீளம் கொண்டது . மேலும் , 152.5 சென்டிமீட்டர் அளவு இறக்கையும் , 900 கிராம் எடையையும் கொண்டது . இந்த வகை வௌவால்கள் அதிக மோப்ப சக்தி வாய்ந்தவை . எனவே , நான்கு மீட்டர் தூரத்திற்கு அப்பால் வாழைப்பழம் இருக்கிறது என்பதை தன்னுடைய மோப்ப சக்தி மூலம் அறிந்து கொள்கிறது . கலாங்ஸ் மற்றும் பழ வௌவால்கள் நரிபோன்று முக அமைப்பை கொண்டுள்ளதால் பறக்கும் நரிகள் என்றும் அழைக்கப்படுகிறது.
🌺 இதுபோன்று ‘ பைபிஸ்ட்ரெலி ‘ என்று அழைக்கப்படும் சிறிய வகை வௌவால்கள் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படுகிறது . இதன் இறக்கையின் அளவு 152 முதல் 200 மில்லிமீட்டர் வரை உள்ளது . மேலும் , 2.5 கிராம் எடை கொண்டுள்ளது .