🌺 புலியின் விருந்து
🌺 புலி வாரத்தில் ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான் உண்ணும் . ஒரு முறை நன்றாக சாப்பிட்டு விட்டதென்றால் , பின் சிறு சிறு பிராணிகளைத் தின்று நெடுநாள் தாக்குப்பிடிக்கும் . பெரிய பிராணியைப் பிடிக்கும் வரை பொறுமையாக காத்திருக்கும் . இரையைப் பிடிக்கத் தாவும்போது ,
இரை ( மான் , வரிக்குதிரை போன்ற விலங்குகள் )
வேகமாக ஒடிவிட்டால் , புலி துரத்திச் செல்லாது . போகட்டும் என்று விட்டுவிட்டு அடுத்த இரைக்காக பொறுமையுடன் காத்திருக்கும் . புலியின் உடல் எடை அதிகமாக இருப்பதால் அதனால் வேகமாக ஒட முடியாது . மிகவும் முயற்சி செய்து பல தடைகளுக்கிடையே உணவைப் பெறுகிறது புலி .