🌺 பொது அறிவு தகவல்கள்
🌺 மிகப்பெரிய தவளை
🌺 உலகிலேயே தவளைகளில் மிகவும் பெரியது ‘ கோலியாத் ‘ என்னும் ஒருவகைத் தவளைகள் . இந்த தவளை 8 1/2 செ.மீட்டர் வரை நீளமும் 7 பவுண்டு வரை எடையும் இருக்கும் . இதன் இரை எலிகளும் , பாம்புகளும் . இந்த வகைத் தவளைகள் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளன .
🌺 எவர்சில்வர்
🌺 எவர்சில்வர் என்று ஒரு தனி உலோகம் இல்லை . துருப்பிடிக்காத எக்குதான் எவர்சில்வர் . இது எக்கு , குரோமியம் மற்றும் நிக்கல் ஆகியன கலந்த கலப்பு உலோகம் .
🌺நூறு வயது
🌺 100 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு இங்கிலாந்தில் ரொம்ப கெளரவம் . அவர்கள் பிறந்த நாளுக்கு இங்கிலாந்து அரசின் சார்பில் வாழ்த்துத் தந்தி அனுப்பப்படுகிறது . அரசின் சார்பில் வரும் தந்தியை உள்ளூர் தந்தி அலுவலகங்கள் ஏற்று உரியவர்களுக்குக் கொண்டு போய் கொடுக்கிறது .