🌺 வரலாற்றில் இன்று

🌺 வரலாற்றில் இன்று

டிச.16:

இன்று ஆங்கில இலக்கிய எழுத்தாளர் ஜேன் ஆஸ்டின் பிறந்த நாள்!

🌺’சென்ஸ் அண்ட் சென்சிபிளிட்டி’ (Sense and Sensibility), பிரைடு அண்ட் பிரிஜுடைஸ் (Pride and Prejudice), மான்ஸ்பீல்டு பார்க் (Mansfield Park), உள்ளிட்ட நாவல்கள் மூலம் ஆங்கில இலக்கிய உலகில் அழியாப் புகழ்ப் பெற்றவர் ஜேன் ஆஸ்டின்.

🌺பிரிட்டிஷ் பெண் எழுத்தாளரான இவர் இங்கிலாந்தில் நடுத்தர குடும்பத்தில் 1775 டிசம்பர் 16-ல் பிறந்தார்.

🌺இவரது எழுத்துகள் 18-ம்நூற்றாண்டில் பெண்கள் சமூகத்தில் முன்னேறத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்டவை.

🌺பலமுறை தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் இவரது படைப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.

🌺பள்ளி படிப்பை தாண்ட முடியாத குடும்பச் சூழலில் வாழ்ந்த ஜேன் ஆஸ்டினின் படைப்புகள் பிற்காலத்தில் பல்வேறு நாடுகளில் ஆங்கில இலக்கிய பட்டப் படிப்புக்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்றது.

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started