🌺 அலெக்ஸாண்டரின் பணிவு

🌺 அலெக்ஸாண்டரின் பணிவு

🌺 மாவீரர் அலெக்ஸாண்டர் சிறு வயதில் நடைபெற்ற சம்பவம்.

🌺 மாவீரன் அலெக்சாண்டர் தனது சிறுவயதில் அரிஸ்டாட்டிலிடம் கல்வி கற்றுக் கொண்டிருந்த பொழுது அரிஸ்டாட்டில் தனது மாணவர்களுடன் வழக்கம் போல் கல்வி கற்றுக் கொடுத்துவிட்டு வேறொரு இடத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்றார். அப்பொழுது அவர்கள் சென்று கொண்டிருந்த பாதையின் இடையே ஆறு ஒன்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.இதைப் பார்த்த அரிஸ்டாட்டில் இந்த ஆற்றைக் கடந்து செல்வதா அல்லது வேறு வழியாக செல்வதா என சிந்தித்தார். இதைக் கண்ட அலெக்ஸாண்டர் சற்றும் எதிர்பாராத விதமாக ஆற்றில் இறங்கி ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் சென்றார். அலெக்ஸாண்டர் அக்கரைக்குச் சென்று விட்டு பின் மீண்டும் ஆசிரியர் அரிஸ்டாட்டிலில் நிற்கும் இடத்திற்கே சென்றார். இதனை சற்றும் எதிர்பாராத ஆசிரியர் அரிஸ்டாட்டில் அலெக்ஸாண்டரை கடிந்து கொண்டார். ஆசிரியர் அரிஸ்டாட்டில் தன்னைத் திட்டியதைக் கண்ட அலெக்ஸாண்டர் ஆசிரியரே நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேளுங்கள் என்றார். ஆசிரியரே நீங்கள் இந்த ஆற்றில் இறங்கும்போது நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டால் , உலகம் ஒரு மிகச் சிறந்த ஆசிரியரையும் , மனிதரையும் இழந்து விடும். நானோ ஆற்றின் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டால் நான் மட்டுமே இறப்பேன். அடுத்தது , மன்னராக என் சகோதரர்கள் வருவார்கள். ஆனால் நீங்கள் இறந்து விட்டால், உங்களுக்குப் பிறகு உங்களைப் போல் ஒரு நல்ல ஆசிரியரையும் , மனிதரையும் காண்பது அரிது என்றார். ஆசிரியர் அரிஸ்டாட்டில் அலெக்ஸாண்டர் பதிவைக் கேட்டவுடன் அவரை வியந்து பாராட்டினார்.

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started