🌺 மல்லிகை பூ எண்ணெயின் நன்மைகள்
🌺 மல்லிகைப் பூக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மல்லிகை எண்ணெய் மூலம் நாள்பட்ட தழும்புகள் , அரிப்புகள் , கூட குணமடையும். மல்லிகைப்பூக்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளியினால் ஏற்படும் மூச்சடைப்பு , இருமல் போன்ற தொந்தரவுகள் நீங்க மல்லிகைப்பூக்கள் உதவி செய்கின்றன
🌺 மல்லிகை மொட்டுக்களை எடுத்து புண்கள் காயம்பட்ட இடங்கள் கொப்புளங்கள் , வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து பூசினால் உடனே குணமடையும். வெளி உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் இருக்கலாம். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும் , சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். இப்படிப்பட்டவர்கள் நான்கு மல்லிகைப்பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இப்படி அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிப் புழு , நாடாப் புழு போன்றவை அழியும். மல்லிகை பூ டி மிகவும் பிரபலமானது. இதை குடிப்பதன் மூலம் மன அழுத்தம் குறைகிறது.