🌺வேதியியலுக்கான நோபல் பரிசு – பெண் விஞ்ஞானி உட்பட 3 பேர் தேர்வு!
🌺இந்தாண்டுக்கான வேதியிய லுக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி உட்பட 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் சுவீடிஸ் அகாடமி ஆஃப் சயின்சஸ் நோபல் பரிசு தேர்வுக் குழு நேற்று தெரிவித்துள்ளதாவது:
🌺2022-ம் ஆண்டின் வேதியிய லுக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி கரோலின் ஆர்.பெர்டோஸி, மார்டன் மெல்டால் மற்றும் கே. பெரி ஷார்ப்லெஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
🌺”கிளிக் கெமிஸ்ட்ரி” மற்றும் பயோ-ஆர்தோகனல் வேதியியல் ஆராய்ச்சி மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டதற்காக அவர்கள் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
🌺வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்படும் 8-வது பெண் என்ற பெருமை கரோலினுக்கு கிடைத்துள்ளது.
🌺அதேபோன்று, வேதியியலில் 2 நோபல் பரிசுகளை வென்ற 5-வது விஞ்ஞானி என்ற பெருமையை ஷார்ப்லெஸ் தட்டிச் சென்றுள்ளார்.
🌺இயற்பியலுக்கான நோபல் பரிசு, ஆலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப்.கிளவுசர் மற்றும் ஆன்டன் ஜெயிலிங்கர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந் தளிக்கப்பட்டுள்ளது.