🌺 ரமோன் மக்சேசே விருது
விமான விபத்தில் மறைந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மக்சேசே நினைவாக ஆண்டுதோறும் அரசுப்பணி, பொது சேவை, சமூக தலைமை, இலக்கியம், அமைதி, வளரும் தலைமை என்ற ஆறு பிரிவுகளில் ஆசியாவில் சிறந்து விளங்கும் நபர்களுக்கும் , நிறுவனங்களுக்கும் ரமோன் மக்சேசே விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வந்தது.
ஆனால் 2009 – ம் ஆண்டு முதல் ஒரே பிரிவில் வழங்கப்படுகிறது.
🌺 ஆசியாவின் நோபல் பரிசு
1958 – ம் ஆண்டு முதல் மணிலாவை தலைமையிடமாக கொண்டுள்ள ரமோன் மக்சேசே விருது அறக்கட்டளை சார்பில் வழங்கப்படுகிற இந்த விருது ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படுகிறது. இந்த விருதை இந்தியாவில் இருந்து வினோபாவே , அன்னை தெரசா, ஜெயபிரகாஷ் நாராயண், சத்யஜித்ரே, வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன், இசைக்கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமி, பண்டிட் ரவிசங்கர், டாக்டர் வி.சாந்தா உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளனர்.
இது வரை 330 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.