🌺 வெட்டுக்கிளி சாப்பிடும் மக்கள்
🌺 ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி உலகில் பருவநிலை மாற்ற பஞ்சத்தால் பாதிக்கப்படப்போகும் நாடுகளின் பட்டியலில் மடகாஸ்கர் முதல் இடத்தில் உள்ளது. இங்கு ஏற்கெனவே கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக மழை இல்லை. இதனால் மக்கள் மோசமான பசிபட்டினியாலும் உணவு உத்தவாதமின்மையாலும் வாடிக்கொண்டிருக்கின்றனர். நாடு முழுவதும் கடும் பஞ்சம் என்கிறார்கள் . மடகாஸ்கரின் தெற்குப் பகுதியில் உள்ள விவசாய சமூகங்கள் இதனால் கடும் பாதிப்பை அடைந்திருக்கின்றன. இந்த பஞ்சத்தை எதிர்கொள்ள அங்குள்ள விவசாயிகள் வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளை உணவாக உண்டு வருகின்றனர்.உடலுக்கு அவசியமான புரதச்சத்தை இவை ஒரளவு கொண்டுள்ளன. சூழலியல் பாதிப்புக்கு மடகாஸ்கர் ஒர் எச்சரிக்கை மணி என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.இன்றைய தேதிக்கு அங்கு முப்பதாயிரம் முதல் ஐம்பதாயிரம் பேர் வரை உண்பதற்கு எதுவுமே கிடைக்காத கடும் பஞ்சத்தில் தவிக்கிறார்கள் . இந்த எண்ணிக்கை அங்கு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அச்சம் தெரிவித்திருக்கிறது ஐ.நாவின் உலக உணவுப் பாதுகாப்புக் குழு.