🌺 வரலாற்றில் இன்று
ஏப்ரல் 5 :
இன்று தேசிய கடல்சார் தினம்!
👉தேசிய கடல்சார் தினம் 1919 ஆம் ஆண்டு மும்பையிலிருந்து லண்டனுக்கு சிந்தியா ஸ்டீம் நேவிகேஷனின் முதல் பயணத்தை குறிக்கிறது.
👉கிழக்கே வங்கக்கடல், தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிகடலென்று மூன்று பக்கமும் கடல் பகுதியை கொண்ட தீபகற்ப (peninsular) நாடு தான் இந்தியா.
👉ஐரோப்பியர்கள் எல்லாம் கப்பல் கட்டும் காலத்திற்கு முன்னரே கடல் தாண்டி நாடுகளை கைப்பற்றிய “கடாரம் கொண்டான்” ராஜேந்திர சோழன் வாழ்ந்த நாடு நம் நாடு.
👉வரலாறு தொடங்கிய காலம் முதல் இன்று வரை இந்திய பெருங்கடலின் முக்கிய ஆளுமையாக இந்தியா தான் இருந்து வருகிறது.
👉அதனால் அதன் கடல் சார் வணிகத்தை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5 அன்று தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது.
👉ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30 அன்று தொடங்கும் தேசிய கடல் வாரத்தின் கடைசி நாளில் தேசிய கடல்சார் தினம் (national maritime day ) கொண்டாடப்படுகிறது.
👉இது இந்தியாவின் வளமான கடல்சார் வரலாற்றைக் கொண்டாடுகிறது.
👉2023 ஆண்டு கொண்டாட்டம் என்பது கடல் சார் தினம் தொடங்கிய 60 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.